ரம்புக்கனை விவகாரத்தினால் சபையில் சலசலப்பு

இன்று புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகி 5 நிமிடங்களிலேயே சபை அமர்வுகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதற்கு சபாநாயகர் தீர்மானித்துள்ளார்.

சபை அமர்வுகள் ஆரம்பமாகிய போது ரம்புக்கனை போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பயதைத் தொடர்ந்து சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.

இதனையடுத்து சபையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.