
யானையுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: இளைஞன் மரணம்
-மூதூர் நிருபர்-
திருகோணமலையில் நேற்று திங்கட்கிழமை இரவு யானையுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
விபத்தில் வவுனியா பட்டாணி புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞன் ஸ்தலத்தில் உயிரிழந்ததுடன் அவரது சக நண்பரான 22 வயதான வயதான இளைஞன் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹொரவபொத்தானை பிரதான வீதி, கன்னியா பகுதியில் வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் யானையுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை பொது வைத்தசாலை பிரேத அறையில் குளிரூட்டி பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் உயிரிழந்த இளைஞனின் சடலத்தை பிரேத அறையில் வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மூதூர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக திருகோணமலை பொது வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்