மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவரைப் பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், 22 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
15 வயதும் 9 மாதங்களும் ஆன பாதிக்கப்பட்ட குறித்த சிறுமி, கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் தனிமையில் இருந்த வேளையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டினை அடுத்து துரிதமாகச் செயற்பட்ட காத்தான்குடி பொலிஸார், அதே கிராமத்தைச் சேர்ந்த 22 வயதுடைய சந்தேக நபரை நேற்று கைது செய்தனர்.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, குறித்த இளைஞர் கடந்த 3 வருடங்களாக அச்சிறுமியுடன் காதல் தொடர்பில் இருந்து வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.