முதலாம் தரத்திற்கு புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்-
.
மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு புதிய மாணவர்களை வரவேற்கும் விழா நடைபெற்றது.

அதன் ஒரு நிகழ்வாக பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்திலும் அதிபர் க.கதிர்காமநாதன் தலைமையில் இவ் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வில் அதிதிகளாக பிரதேச பாடசாலை அதிபர்களான சி.முருகவேல், அ.ஜெயஜீவன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

புதிய மாணவர்கள் சுபவேளையில் இறை வணக்கத்துடன் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆசியுடன் பழைய மாணவர்களினால் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு வகுப்பறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அங்கு அதிபர் மற்றும் கௌரவ அதிதிகளினால் மாணவர்களின் எதிர்கால கல்வி தொடர்பான அறிவுரை வழங்கப்பட்டது.