மஹியங்கனையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலத்த காயம்

-பதுளை நிருபர்-

மஹியங்கனை தொடம்வத்தை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி நபர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

மஹியங்கனை – தம்பராவ பகுதியை சேர்ந்த 52 வயதுடைய நபரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

மஹியங்னை வம்இவுர பகுதியை சேர்ந்த 56 வயதுடைய நபர் ஒருவரே துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், துப்பாக்கி சூட்டிற்கு ரி56 ரக துப்பாக்கி தோட்டாவை பயன்படுத்தி சுடக்கூடிய கல்கடர்ஸ் எனப்படும் துப்பாக்கியினாலேயே துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாகபொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த பல வருடங்களாக இரு குழுக்களுக்கு இடையே முறுகல் நிலை இருந்து வந்த நிலையில் கடந்த 6ஆம் திகதி பொலிஸார் அவர்களுக்கிடையில் சமரசம் செய்து வைத்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் நேற்று குறித்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.

மேலும் காயமடைந்த நபர் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் சந்தேக நபரை இன்று வியாழக்கிழமை  நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க