
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இருக்கும் பிரதான வீதியானது ஒருவழி பாதையாக நடைமுறையில் இருக்கிறது.
எனினும் அவ்வீதியால் பயணிக்கும் வாகனங்கள் இருவழி பாதையாக வீதியை பயன்படுத்துவதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள அதிகளவான பிரதேசங்களில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக மக்கள் வருகின்றனர்.
இந்நிலையில் இவ்வாறாக அவ்வீதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதை அதிகாரிகள் கவனத்திற் கொள்ள வேண்டும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்