மட்டு.குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் தரம் 01இற்கு மாணவர்களை இணைக்கும் வைபவம்

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயப்பிரிவிற்குட் குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் தரம் 01 ற்கு மாணவர்களை இணைக்கும் வைபவம் வித்தியாலய அதிபர் எஸ் சிறிதரன் தலைமையில் இன்று வியாழக்கிழமை முற்பகல் 8.30 ற்கு இடம்பெற்றது.

முதல் நிகழ்வாக தரம் 01 மாணவர்கள் மற்றும் ,பிரதம அதிதிகள் பாடசாலை முன்றலில் இருந்து மலர்மாலை அணிவிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டு , மங்கள விளக்கேற்றல் , இறைவணக்கம் , அதிபர் உரை மற்றும் சின்னச்சிறு மாணவ மணிகளின் நடனம் , பாட்டு என்பன நிகழ்வை அலங்கரித்தன.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக பட்டிருப்பு கல்வி பிரதிநிதி திருமதி வ. தனசேகரன் , மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் s. செல்வராசா மற்றும் பழைய மாணவர் சங்கத்தினர் , பெற்றோர்கள் , பாடசாலை மாணவர்கள் , விளையாட்டு கழக உறுப்பினர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்