
மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை பிரதான வீதியில் பாரிய விபத்து!
மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை பகுதியில், எரிபொருள் பவுசர் மற்றும் முச்சக்கரவண்டி மோதி இடம்பெற்ற விபத்தில், 6 பேர் காயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை பிரதான வீதியில், சற்று முன்னர் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில், முச்சக்கரவண்டி சாரதி மற்றும் முச்சக்கரவண்டியில் பயணித்த இரண்டு குழந்தைகளும், மூன்று பெண்களும், காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.