மட்டக்களப்பு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வேலைதிட்டம்

மட்டக்களப்பு திராய்மடு பகுதியில் முருங்கை மரங்கள் நடும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடா மட்டக்களப்பு நட்புறவு பண்ணை என்ற பெயரில் இடம் பெற்ற இந் நிகழ்வில் கனடாவில் இருந்து வருகை தந்த டானியல் வூட், மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளீதரன் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வர் தி.சரவணபவன் ஆகியோர் கலந்து கொண்டு மரங்களை நாட்டி வைத்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்