
மகாவலி ஆற்றுக்குள் தவறி விழுந்த யுவதி
மகாவலி ஆற்றுக்குள் நேற்று வியாழக்கிழமை பகல் தவறி விழுந்த யுவதி போக்குவரத்து பொலிஸ் அதிகாரியால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கட்டுகஸ்தோட்டை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதியொருவரே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி கட்டுகஸ்தோட்டை பாலத்திலிருந்து மகாவலி ஆற்றுக்குள் தவறி விழுந்துள்ளதாக அப்பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு பிரதேசவாசிகள் சிலர் தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரி மகாவலி ஆற்றுக்குள் குதித்து யுவதியை காப்பாற்றியுள்ளார்.
இதனையடுத்து இந்த யுவதி சிகிச்சைக்காக கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யுவதியை காப்பாற்றிய போக்குவரத்து பொலிஸ் அதிகாரியை பிரதேசவாசிகள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்