போதை விழிப்புணர்வு நடைபவணி

-மூதூர் நிருபர்-

போதைப் பொருள் பாவனைக்கெதிரான விழிப்புணர்வு நடைபவணி இன்று சனிக்கிழமை காலை திருகோணமலையில் இடம்பெற்றது.

“போதைப் பொருளற்ற சமூகம்” எனும் தொணிப் பொருளின் கீழ் திருகோணமலை மாவட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.

விழிப்புணர்வு நடைபவணியில் ஈடுபட்டோர் போதைப் பாவனைக்கெதிரான சுலோகங்களை ஏந்தி, நடனங்கள் ஆடி போதை விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டதை காணமுடிந்தது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்