போதை பொருளுடன் நடன கலைஞர் கைது

“குஷ்” என்ற போதை பொருளை இலங்கைக்கு கொண்டு வந்த நபரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஹோமாகம பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய கிளப் நடனக் கலைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐந்து மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான 5 கிலோ 278 கிராம் எடையுடைய  “குஷ்” கஞ்சா தனித்தனியாக பொதி செய்யப்பட்ட 36 பொதிகள் இதன்போது மீட்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து எயார் ஏசியா விமானம் எஃப்டி-140 (FD – 140) இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்