பைடனை இளைஞர்கள் விரும்பவில்லை
அமெரிக்காவின் இளம் வாக்காளர்கள் மத்தியில் ஜனாதிபதி ஜோ பைடனிற்கான ஆதரவு வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றது என நியுயோர்க்டைம்ஸ் தெரிவித்துள்ளது.
பெருமளவு இளைஞர்கள் அவரை விரும்பவில்லை என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
பைடனின் வயதும் அதிகரித்துவரும் வாழ்க்கைசெலவும் 18 முதல் 34 வயதான வாக்காளர்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு குறைவதற்கு காரணம் என தெரிவித்துள்ள நியுயோர்க்டைம்ஸ், பைடன் கமலா ஹாரிசிற்கான ஆதரவு வீழ்ச்சியடைந்துவரும் நிலையில் டொனால்ட்டிரம்பிற்கான ஆதரவு அதிகரிக்கின்றது எனவும் தெரிவித்துள்ளது.
18 முதல் 34 வயதானவர்கள் மத்தியில் டிரம்பிற்கு 46 வீத ஆதரவும் பைடனிற்கு 42 வீத ஆதரவும் காணப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்