
பெட்ரோல் குண்டு வீசி சிறுவன் உயிரிழப்பு : இருவர் கைது
களுத்துறை, கமகொடவில் வீடொன்றின் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில், ஒரு சிறுவன் உயிரிழந்ததுடன், பெண் ஒருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், களுத்துறையில் உள்ள தோடன்கொட மற்றும் கொங்கோட பகுதிகளைச் சேர்ந்த 23 மற்றும் 25 வயதுடைய சந்தேக நபர்களை கைது செய்தனர்.
தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், மற்றொரு பெட்ரோல் குண்டு மற்றும் இரண்டு கைபேசிகளை பொலிஸார் கைது செய்த போது கண்டுபிடித்தனர்.
தாக்குதலை நடத்துவதற்காக, இருவரும் 5000 ரூபா ஒப்பந்தத்தைப் பெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
களுத்துறையில் உள்ள ஒரு வீட்டில், பெட்ரோல் குண்டு தாக்குதல் நடாத்தியதில், 28 வயதுடைய ஒரு பெண் காயமடைந்தார், அதே நேரத்தில் சம்பவத்தில் காயமடைந்த 6 வயது சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தமை, குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்