புறா ஒன்றின் மீது டாக்சியை ஏற்றி கொன்ற சாரதி கைது

ஜப்பானின் டோக்கியோவில் நெடுஞ்சாலையில் புறா ஒன்றின் மேல் டாக்சியை ஏற்றிய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சாலையில் சென்ற புறாக் கூட்டத்தின் மீது அவர் டாக்சியை ஓட்டியதாகவும் அதில் ஒரு புறா உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட நபர் 50 வயதுடையவர் எனவும்,  குறித்த சம்பவம் இடம்பெற்ற போது அவர் மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்