புத்தாண்டு பலகாரங்களுடன் சிறை சென்ற சஜித் அணியினர்

புத்தாண்டு பலகாரங்களுடன் சிறைக்கு சென்ற சஜித் அணியினர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக் கவை பார்வையிட்டு வழங்கியுள்ளனர்.

தமிழ் – சிங்கள புத்தாண்டு கொண்டாடப்பட்ட நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்ணான்டோ மற்றும் மனுஷ நாணயக்கார புத்தாண்டு இனிப்புக்களுடன் சிறையிலுள்ள ரஞ்சனை பார்க்கச் சென்றுள்ளனர்.

சிறைச்சாலையில் ரஞ்சன் ராமநாயக்கவை பார்வையிட்டு புத்தாண்டு இனிப்புகளை வழங்கி உரையாடிவிட்டு வெளியே வந்த ஹரீன், மனுஷ ஆகியோர், ரஞ்சனுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு தேவையில்லை என கருத்து தெரிவித்தனர்.

நீதித்துறையை அவமதித் தார் என்ற குற்றச்சாட்டில், ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி அமைச் சருமான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.