பாடசாலை செல்லும் சிறுவர்கள் செய்த மோசமான செயல்

முகத்தை மூடி கையுறை அணிந்து வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்த மர்ம கும்பலைச் சேர்ந்த மூவரை கஹதுடுவ பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கஹதுடுவ பிரதேசத்தில் வசித்து வரும் 13 மற்றும் 18 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் பாடசாலை செல்லும் சிறுவர்களும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வீடுகளில் இருந்த மடிக்கணினிகள், பித்தளைப் பொருட்கள், கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட சொத்துக்கள் திருடப்பட்டு,

சம வயதுடைய சிறுவர்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்