பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளரை வெளியேற்றுமாறு கோரி பாரிய போராட்டம்

 

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயப்பிரிவிற்குட்பட்ட மட் /பட் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய கல்வி சமூகத்தினால் பட்டிருப்பு கல்வி வலயக்கல்விப்பணிப்பாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

இதன் போது பாடசாலை முன்றலில் இருந்து பேரணியாக பட்டிருப்பு வலயகல்வி அலுவலகம் வரை போராட்டம் அமைதியான முறையில் இடம்பெற்றது.

இதன் போது ஆர்ப்பாட்டகாரர்கள் பல்வேறு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் / மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் தலையிட்டு இதற்கான உடனடி தீர்வு வழங்க வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதன் பிரகாரம் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிரத்தியேக செயலாளர்   பூ.பிரசாந்தன் சம்பவ இடத்துக்கு நேரடியாக விஜயம் செய்து, ஆசிரியர்கள், மாணவர்கள், மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து, கொண்டதுடன்  கல்விச்சமூகம் இப் பிரச்சினைக்கான மகஜரை இராஜாங்க அமைச்சரின் செயலாளர் பூ. பிரசாந்தனிடம் கையளித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்