நோயாளிகளை ஏற்றிச் சென்ற நோயாளர் காவு வண்டி விபத்து!
-யாழ் நிருபர்-
முழங்காவில் ஆதார வைத்தியசாலையில் இருந்து, கிளிநொச்சி வைத்தியசாலைக்கு இரண்டு நோயாளிகளை ஏற்றிச் சென்ற, முழங்காவில் வைத்தியசாலைக்கு சொந்தமான நோயாளர் காவுவண்டி விபத்துகுள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
பூநகரிக்கும் பரந்தனுக்கும் இடைப்பட்ட பகுதியில், நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற உழவு இயந்தின் மீது மோதி நோயாளர் காவு வண்டி விபத்துக்குள்ளாகியது.
இந்நிலையில், நோயாளர் காவு வண்டியின் முன் பக்கம் மிகவும் சேதமடைந்துள்ளது.
அந்த நோயாளர் காவு வண்டி தொடர்ந்தும் இயங்க முடியாத நிலை ஏற்பட்டதால் நோயாளிகளை ஏற்றிச் செல்வதற்கு கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து நோயாளர் காவு வண்டி வரவழைக்கப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்