நுவரெலியா ஹாவாஎலிய ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய முத்தேர் பவணி

நுவரெலியா – ஹாவாஎலிய ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்ரா பௌர்ணமி 2024 முத்தேர் திருவிழா இரதோற்சவம் நேற்று செவ்வாய்க்கிழமை பக்திபூர்வமாக ஆரம்பமானது.

சிறப்பு அபிஷேகம் இடம்பெற்று திருவிழக்கு பூஜை மற்றும் வசந்த மண்டப பூஜை நடைபெற்று அலங்கார தீபஆராதனை இடம்பெற்று அதனைத் தொடர்ந்து விநாயகப் பெருமான், முருகப் பெருமான், ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆகிய மூன்று தெய்வங்களின் வெளிவீதியூடாக தேரேறி நகர் வலம் ஆரம்பமானது.

இதில் பல பகுதியில் வருகைதந்த பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர் மேலும் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றிக் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்