நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது நல்லாட்சியில் ஆனால் பழியேற்றது கோட்டாபய ராஜபக்ச

நாட்டின் பொருளாதாரம் நல்லாட்சி காலத்தில் வீழ்ச்சியடைய தொடங்கி விட்டது ஆனால் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என கெட்ட பெயர் எடுத்த கோட்டாபய ராஜபக்ச என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் நாட்டில் பாரிய அபிவிருத்திகளை நாங்கள் தான் முன்னெடுத்திருந்தோம், ஆனால் நல்லாட்சி காலத்தில் அபிவிருத்தி திட்டங்கள் நிறுத்தப்பட்டு நாட்டின் பொருளாதாரம் விழ்ச்சியடைய தொடங்கி விட்டிருந்தது என அவர் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்