நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 8 பெண்கள் உட்பட 641 பேர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று புதன் கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 8 பெண்கள் உட்பட 641 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 16 பேர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள 3 பேரை புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 158 கிராம் ஹெரோயின்,101 கிராம் ஐஸ்,3,169 கிராம் கஞ்சா,33 கிராம் ஹெரோயின்,10 கிராம் ஐஸ் மற்றும் 184 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்