தேவேந்திரமுனை இரட்டைக் கொலையின் பின்னணி!

மாத்தறை – தேவேந்திரமுனை பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்த சம்பவம் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

துப்பாக்கிச்சூடு குறித்த மேலதிக விசாரணைகளை மாத்தறை குற்றவியல் விசாரணை பிரிவிடம் ஒப்படைக்கவுள்ளதாக கந்தர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த இரண்டு பேரில் ஒருவர் மீது ஏற்கனவே போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மாத்தறை – தேவேந்திரமுனை பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க