தெற்கு அதிவேக வீதியில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு!
தெற்கு அதிவேக வீதியின் பத்தேகம நுழைவு பகுதிக்கு அருகில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், ஐந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
வேன் ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதி இன்று சனிக்கிழமை காலை இந்த விபத்து நேர்ந்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டு இன்று காலை காலி நோக்கிப் பயணித்த வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் உயிரிழந்தவர் காலி கோட்டை பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், விபத்தில் காயமடைந்;தவர் காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.