திசர அனுருத்த பண்டார பிணையில் விடுதலை

சமூக ஊடக செயற்பாட்டாளரும், பல்கலைக்கழக மாணவருமான திசர அனுருத்த பண்டார பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திசர அனுருத்த பண்டார முகத்துவார காவல்நிலையத்தின் குற்ற விசாரணை பிரிவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்திருந்தது.

தண்டனை சட்ட கோவையின் 120ஆம் இலக்க பிரிவின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அரசாங்கத்திற்கு எதிராக சூழ்ச்சி விளைவித்தமைக்காக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.