தாயாரால் கண்டிக்கப்பட்ட 16 வயது சிறுவன் தற்கொலை

சிறுவன் கையடக்க தொலைபேசி விளையாட்டுக்களிற்கு அடிமையாகியுள்ளார். நாள் முழுவதும் கையடக்க தொலைபேசியுடன் பொழுதை கழித்து வந்துள்ளார். இதனால், தாயாரால் கண்டிக்கப்பட்ட 16 வயது சிறுவன் தற்கொலை செய்துள்ளார்.

உடுதும்பர, ஹாலியால பகுதியைச் சேர்ந்த சிறுவன் கடந்த செவ்வாய்க்கிழமை  காலை தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கையடக்க தொலைபேசி பாவிக்க கட்டுப்பாடு விதித்துள்ளார். இதையடுத்து, சிறுவன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தெல்தெனிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையின் போது மரணத்திற்கான காரணம் தற்கொலை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.