தலைவரின் கூட்டமைப்பையே சிதைத்தவர்களால் தமிழ் மக்களின் நலன் பற்றிச் சிந்திக்க இயலுமா? – அங்கஜன் கேள்வி

-யாழ் நிருபர்-

தலைவரின் கூட்டமைப்பையே சிதைத்தவர்களால் தமிழ் மக்களின் நலன் பற்றிச் சிந்திக்க இயலுமா? என ஜனநாயக தேசிய கூட்டணியின் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாராளுமன்ற தேர்தலுக்கான மக்கள் சந்திப்புகளில் ஈடுபட்டுள்ள அவர், இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

எம் மக்கள் அரசியல் ரீதியாகவும் தலைநிமிர்ந்து தன்மானத்துடன் நிற்க வேண்டும் என்றால் தமிழர்கள் மத்தியில் காணப்படும் ஒற்றுமையே பலம் என அவர் அன்றே கணித்து தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைப்பதில் அதிக கவனம் செலுத்தினார்.

Shanakiya Rasaputhiran

ஆனால் இன்று எம் தமிழ் தலைமைகள் எமக்காக உயிர் தியாகம் செய்தவர்களை மறந்து தமது சுயலாபத்திற்காக ஆளுக்கோர் பக்கம் நீயா? நானா? எனப் பிரிந்து நிற்கின்றனர்.

தமிழ் மக்களுக்காக தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் என அனைவரும் நம்பி இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று பிளவடைய இடமின்றி உள்ள போதிலும் மேலும் பிளவடைவதற்கான வாய்ப்புக்கள் கண்ணூடாக தெரிகின்றன.

வீடாக இருந்த அந்த ஒற்றைச் சின்னம் இன்று சைக்கிள்,மான்,மாம்பழம் ,சங்கு என பிளவடைந்து மக்களுடைய எதிர்பார்ப்பிலும் மண் அள்ளிப் போட்டுள்ளது.

மக்களுக்காக ஒன்றுபட இயலாதவர்கள் எப்படி மக்களுக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பார்கள்? என மேலும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Poineer Hospital Owner
Jana Uncle Post Ad