செல்வச்சந்நிதியான் ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய முருக பக்தர்களின் பாதயாத்திரை ஆரம்பம்

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – வடமராட்சி தொண்டைமனாறு செல்வச்சந்நிதியான் ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய முருக பக்தர்களின் பாதயாத்திரை இன்று சனிக்கிழமை காலை 7:30 மணியளவில் ஆரம்பமாகியது.

அதன் முதல் நிகழ்வாக செல்வச் சந்நிதியான் ஆலயத்தில் சிறப்பு பூசைகள் இடம் பெற்று, சந்நிதியான் ஆலய பிரதம பூசகர் அவர்களார் வேல்கள் யாத்திரிகர்களிடம் கையளிக்கப்பட்டு, அங்கிருந்து சந்நிதியான் ஆச்சிரமத்திற்க்கு சென்று அங்கும் பூசைகள் இடம் பெற்று, அன்னதானம், மற்றும் சிறிய தொகை பணமும் வழங்கப்பட்டதுடன், விசேட பயனைகளும் இடம் பெற்று சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் மோகன் சுவாமிகள் யாத்திரிகர்களை வழியனுப்பிவைத்தார்.

அதனை தொடர்ந்து, இரு அணிகளாக புரிந்து ஒரு அணி ஆவரங்கல், புத்தூர் ஊடக மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் வழியாக செல்கிறது. இன்னும் ஒரு அணி பருத்தித்துறை வல்லிபுரம் நாகர்கோவில் மருதங்கேணி ஊடாக செல்கிறது.

இன்றைய இந்த யாத்திரையில் 140 யாத்திரிகள் செல்கின்றனர்.

பல்வேறு இரகங்களில் இருந்து பல்வேறு வழிகளில் யாத்திரிகர்கள் சென்றாலும் மட்டக்களப்பு உகந்தை முருகன் ஆலயத்திலிருந்து ஒன்றாகவே கதிர்காம கந்தன் ஆலயம் வரை செல்லவுள்ளனர்.

45 தொடக்கம் 52 நாட்களில் நாள் கதிர்காம கந்தன் ஆலயத்தை சென்றடையவுள்ளனர்.

அங்கு சென்றதும் கதிர்காம கந்தன் திருவிழா நிறைவடையும் வரை தங்கியிருந்தே வீடுகளுக்கு திரும்புவது வழமையாகும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்