சின்ன ஊரணி வாலிபர் ஐக்கியத்தினால் நடாத்தப்பட்ட மாபெரும் இரத்த தான முகாம்

உயிர் காப்போம் இலங்கை மெதடிஸ்த்த திருச்சபை, சின்ன ஊரணி வாலிபர் ஐக்கியத்தினால் நடாத்தப்பட்ட  மாபெரும் இரத்த தான முகாம்.

இன்று வெள்ளிக்கிழமை காலை 9.00 அளவில்  சின்ன ஊறணி அமைந்துள்ள மெதடிஸ்த்த ஆலயத்தின் அருட்தந்தை கே.ஜெகதாஸ் தலைமையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியின் வைத்தியர் டி.தவநேசன், இரத்த வங்கி பொறுப்பு உத்தியோகத்தர் க.ஜெயராஜ் மற்றும் தாதி உத்தியோகத்தர்கள்  கடமையாற்றினார்.

யாரெல்லாம் இரத்த தானம் செய்யலாம்?

உடல் ஆரோக்கியத்தோடு இருக்கும் 18 வயது முதல் 65 வயதுள்ள அனைவரும் ரத்ததானம் செய்யலாம்.
அதேபோல், ரத்த தானம் செய்பவர்களின் உடல் எடை சுமார் 45 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும்.

ஒருமுறை 350 லிருந்து 450 மில்லி லீட்டர் வரை (ஒரு யூனிட்) இரத்தத்தைக் கொடுக்கலாம். இதனால், உடலுக்கு எந்த பாதிப்பும் வராது.

அதேபோல், ஒரு முறை இரத்த தானம் செய்துவிட்டால் 3 மாதம் கழித்து மீண்டும் இரத்த தானம் செய்யலாம்.

பொதுவாக, ஆண்கள் மூன்று மாதத்துக்கு ஒரு முறையும், பெண்கள் நான்கு மாதத்துக்கு ஒரு முறையும் இரத்ததானம் செய்வது சிறந்தது.

உடல் நலப் பிரச்னைகள், மாதவிடாய் காலத்திலுள்ள பெண்கள், மதுபோதையில் இருப்பவர்கள், கர்ப்பிணிகள், பச்சிளம் தாய்மார்கள் இரத்த தானம் செய்ய முடியாது என்ற ஆலோசனையும் வழங்கப்பட்டதோடு,

இந் நிகழ்வானது   COVID – 19 பரவலை தடுப்பதற்கான சுகாதார வழிமுறைகள் பேணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் சுமார் 30க்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலரும் இந்த இரத்த முகாமில் கலந்து கொண்டனர்.

அத்தோடு சுமார் மதியம் 1.30 மணி அளவில் இந் நிகழ்வு நிறைவுக்கு வந்தது.