சித்தியடைந்த மாணவர்களுக்கு ஜனாதிபதியின் மகிழ்ச்சியான செய்தி

2022 (2023) க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு முதன்முறையாக தோற்றி, சித்தியடைந்து உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ள மாணவருக்கு ஜனாதிபதி நிதியதின் ஊடாக புலமைப் பரிசில் வழங்கும் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாட்டிலுள்ள 100 கல்வி வலயங்களும் உள்ளடங்கும் வகையில் ஒரு கல்வி வலயத்தில் இருந்து 50 மாணவர்கள் வீதம் தெரிவு செய்யப்பட்டு, 5000 மாணவர்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா புலைமைபரிசில் வழங்கப்படவுள்ளது.

இது குறித்த மேலதிக விபரங்களையும், விண்ணப்பங்களையும் presidentsfund.gov.lk மற்றும் pmd.gov.lk ஆகிய இணையத்தளங்களில் பெற்றுக்கொள்ள முடியுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்