சாதனை படைத்து வரும் கார்த்தியின் ‘சர்தார் 2’ பட முன்னோட்டம்

தமிழில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘சர்தார் 2’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘சர்தார் 2’எனும் திரைப்படத்தில் கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு, ரெஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜோர்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் லக்ஷ்மன் குமார் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பிரி லுக் காணொளி ஆகியவை வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்தியோக வெளியீட்டு நிகழ்வில் படக்குழுவினர் பங்குபற்றினர்.

‘சர்தார் 2’ பட காணொளியில் இடம்பெறும் காட்சிகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருப்பதால், பேராதரவு கிடைத்து வருகிறது. இந்த காணொளி வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க