சட்ட உதவி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

-மூதூர் நிருபர்-

சட்ட உதவி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு மூதூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக் தலைமையில் இன்று புதன்கிழமை நடைபெற்றது.

சட்ட உதவி ஆணைக்குழுவின் செயற்பாடுகள், நீதிமன்ற முறைகள் மற்றும் நுகர்வோர் சட்டங்கள் தொடர்பாக சட்டத்தரணி ஷிபா , எஸ். ஷபியா (அட்டோர்னியெர் அட் லோ (Attorney at Low), எச். நாசீர் (அட்டோர்னியெர் அட் லோ (Attorney at Low ) சட்டத்தரணிகளினால் தெளிவுபடுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர், சட்டத்தரணிகள், மூதூர் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர், நிருவாக கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் பங்குபற்றிருந்தமை குறிப்பிடதக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்