சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம்

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிரான போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி நாளை சனிக்கிழமை மாலை 6:30 மணிவரை தொடரும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த போராட்டமானது தொடர்ச்சியாக ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது.

இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்