கெனியன் மின் உற்பத்தி பணியை மீண்டும் ஆரம்பிக்கின்றது

மஸ்கெலியா – கெனியன் நீர்த்தேக்கத்திலிருந்து மின் உற்பத்தி பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மவுசாகலையில் இருந்து கெனியன் நீர்த்தேக்கத்திற்கு நீரை கொண்டு செல்லும் நிலத்தடி சுரங்கப்பாதையின் பராமரிப்பு பணிகள் மின்சாரம் துண்டிப்பு காரணமாக கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டு இருந்தது.

இதேவேளை, கெனியன் நீர்த்தேக்கத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்பில் 60 மெகாவாட் மின்சாரத்தை சேர்க்கும் என தெரிவிக்கப்படுகின்றது.