கீழே இருந்த நகையை எடுத்து கொடுத்தவர் மீது தாக்குதல் : ஐவருக்கு விளக்கமறியல்!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில், நிலத்தில் இருந்த நகையை எடுத்து கொடுத்தவர் மீது தாக்குதல் மேற்கொண்ட ஐவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

தாக்குதலுக்கு உள்ளான நபர் கடந்த 24ஆம் திகதி இவ்வாறு நகையை ஒப்படைத்துள்ளார்.

பின்னர் இரண்டு தடைவைகள் அந்த நகை குறித்து விசாரித்தவேளை அங்கு நின்ற குழுவினரால் துக்குதலுக்கு உள்ளாகினார்.

இச்சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தாக்குதலை மேற்கொண்ட ஐவர் உள்ளடங்கிய குழுவினர் நேற்W jpq;fl;fpoik கைது செய்யப்பட்டு, இன்றையதினம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.