கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் : 16 வது நாளாக தொடரும் போராட்டம்

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிருவாக நடைமுறைகளின் மீது நடைபெறும் அத்துமீறல்கள் அடக்குமுறைகளுக்கு எதிரான மக்கள் போராட்டம் 16 வது நாளாக இன்றும் தொடர்கிறது.

இன்று செவ்வாய்க்கிழமை திருக்கோவில் பொதுமக்களும், கல்முனை 01B பிரிவு பொதுமக்களும் இணைந்து கல்முனை ஸ்ரீ தரவைப் பிள்ளையார் ஆலயத்தின் முன்பாக இருந்து நடைபவனியாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக வந்து போராட்டத்தில் இணைந்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்