
கடல்பசுவை வேட்டையாடியவர் கைது
மன்னாரில் கடல்பசு இறைச்சியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வனவிலங்கு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் சந்தேக நபரின் வீட்டில் கடல் பசு சதை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சந்தேக நபர் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் ரூ. 500,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அழிந்து வரும் குறித்த விலங்குகளைப் பாதுகாக்க வனவிலங்கு பாதுகாப்புத் துறை பல்வேறு நடவடிக்கைகளைச் செயல்படுத்தியுள்ளது.
மேலும் இவ்வாறு அழிந்து வரும் கடல் பசுக்களை வேட்டையாடும் நபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் 1992 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தகவல் வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Beta feature