ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5வர் சுட்டுக்கொலை

 

அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் எட்டு வயது சிறுவன், இரண்டு பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் தலையில் சுடப்பட்டு ஒரே முறையில் கொல்லப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 38 வயதான சந்தேகநபர் தப்பியோடியுள்ளதுடன் அவர் மீது ஐந்து கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அருகிலுள்ள காட்டில் பதுங்கியிருப்பதாக நம்பப்படும் சந்தேக நபரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன் ஆளில்லா விமானத்தையும் பயன்படுத்தி வருவதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்