Sri Lanka Tamil News Site

குடும்பஸ்தர் ஒருவர் அடித்துக் கொலை

- Advertisement -

உடுகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொனதெனிய பிரதேசத்தில் தாக்குதல் மூலம் கொலைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கொலைச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளதுடன், உடுகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

- Advertisement -

இறந்தவரின் மனைவி, குழந்தை மற்றும் தாய் ஆகியோர் வீட்டில் இரவு உணவு உண்டு கொண்டிருந்த போது, ​​அருகில் உள்ள பகுதியில் இருந்து சத்தம் கேட்டுள்ளது

சத்தம் கேட்டு அவர்கள் சென்று பார்த்த போது, ​​சிலர் குறித்த உயிரிழந்த நபரை தாக்கிக் கொண்டிருந்தனர். அதன்பின் பலத்த காயங்களுக்கு உள்ளான அவரை மீட்டு உடுகம வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், உடுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

- Advertisement -