ஐ.பி.எல் தொடரின் 16 ஆவது போட்டி

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 16 ஆவது போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

குறித்த போட்டியில் லக்னோ சுப்பர் ஜயன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இதேவேளை இந்த ஆண்டின் ஐ.பி.எல். தொடரில் இதுவரையில் 15 போட்டிகள் நடைபெற்று நிறைவடைந்துள்ளன.

இதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணி 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

டெல்லி கெப்பிட்டல்ஸ், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளும் தலா 4 புள்ளிகளைப் பெற்றுள்ள போதும், சராசரி ஓட்ட விகிதங்களின் அடிப்படையில் முறையே இரண்டாம், மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களில் உள்ளன.

மும்பை இந்தியன்ஸ், லக்னோ சுப்பர் ஜயன்ஸ், சென்னை சுப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ், சண்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் தலா இவ்விரண்டு புள்ளிகளுடன் ஆறாம், ஏழாம், எட்டாம், ஒன்பதாம் மற்றும் பத்தாம் இடங்களைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க