இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு பசறை மக்களிடம் திடீர் காதல்: லெட்சுமணன் சஞ்சய்

-பதுளை நிருபர்-

இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு பசறை மக்களிடம் திடீர் காதல் முளைத்து ஏன் என்று தெரியவில்லை, நாளை பசறை நகரில் போராட்டம் நடத்த போவதாக தெரியவருகின்றது. நீங்கள் என்ன போராட்டம் நடத்தி என்ன செய்தாலும் பதுளை மக்கள் உங்களை நிராகரித்துவிட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் லெட்சுமணன் சஞ்சய் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அதாவது 2020 நடந்த தேர்தலில் மக்களின் எண்ணம் என்ன என்று உங்களுக்கு காட்டி விட்டார்கள் நாங்கள் பெரிய கட்சி என்றார்கள். ஆனால் பாராளுமன்ற தேர்தலில் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. இனியும் உங்களால் வெற்றி பெற முடியாது.

அது மாத்திரம் இன்றி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கொழும்பு புகையிரத நிலையத்துக்கு முன்னால் நேற்றைய தினம் போராட்டத்தை நடத்தி இருந்தார்கள். அந்த போராட்டம் ஆனது தோட்ட கம்பெனிகளின் கவனத்தை ஈர்க்க வில்லை.மாறாக அங்கு வந்த சுற்றுலா பயணிகளின் கவனத்தை தான் ஈர்த்துள்ளது. இவர்களின் போராட்டத்தை பார்த்து சுற்றுலா பயணிகள் வினோதமாக இருந்ததாக கூறினார்கள்.

நீங்கள் போராட்டம் செய்ய வேண்டும் கொழும்பில் அல்ல இப் போராட்டம் தோட்டத்தில் நடத்த வேண்டும். உங்களால் போராட்டம் செய்ய தெரியவில்லை என்றால் எங்களிடம் வாருங்கள் போராட்டம் எப்படி செய்வது என்று சொல்லி தருகின்றோம். அது மட்டும் அல்லாமல் இனியும் பதுளை மக்களை முட்டாளாக்க நினைத்தால் அது நீங்கள் உங்களை முட்டாளாக்கி கொள்வதற்கு சமன் நீங்கள் எவ்வளவு போராடினாலும் பதுளை மக்கள் இனி உங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றார் லெட்சுமணன் சஞ்சை.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்