இலங்கையின் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூரியா கிளிநொச்சி விஜயம்

இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய தலைமை பயிற்றுநருமான சனத் ஜெயசூரியா கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் விஜயம் மேற்கொண்டு மைதானத்தை பார்வையிட்டார்.

குறித்த மைதானத்தை புற்தரை மைதானமாக மாற்றி கிளிநொச்சி மாவட்டத்தின் துடுப்பாட்டத்துறையை வளர்க்கும் நோக்குடன் மைதானத்தை பார்வையிட்டதாக தெரிவித்தார்.

பாடசாலையின் முதல்வர் சவரி பூலோகராஜா மற்றும் கிளிநொச்சி மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்தைச் சேர்ந்தோரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க