
இராட்சத ஆமைக்கு புத்தாண்டு எண்ணெய் தடவும் சடங்கு
புத்தாண்டு சடங்குகளின் ஒரு பகுதியாக தலையில் எண்ணெய் தடவும் சடங்கு இன்று புதன் கிழமை தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் நடைபெற்றது.
அதிர்ஷ்டத்திற்காக தலையில் எண்ணெய் தடவும் சடங்கு மிருகக்காட்சிசாலையில் வசிக்கும் யானையுடன் ஆரம்பமானது.
இதன்போது, இலங்கையில் வாழும் மிகவும் வயதான விலங்கான 153 ஆண்டுகள் பழமையான இராட்சத ஆமையின் தலையில் எண்ணெய் பூசப்பட்டது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து தெஹிவளை மிருகக்காட்சிசாலையால் பெறப்பட்ட பழுப்பு நிற கரடியின் தலையிலும் எண்ணெய் பூசப்பட்டது.
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலின் பேரில், துணை இயக்குநர் உள்ளிட்ட மிருகக்காட்சிசாலையின் நிர்வாகத்தினரால் இது ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்