அலி சப்ரி இன்னும் நிதி அமைச்சரா ?

அலி சப்ரியின் நிதியமைச்சர் இராஜினாமாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் , இன்றுவரை நிதி அமைச்சராக உள்ளார் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக இலங்கையில் இருந்து வெளிவரும் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சப்ரி இந்த வார தொடக்கத்தில் மூன்று அமைச்சர்களுடன் பதவிக்கு நியமிக்கப்பட்டார், ஆனால் ஒரு நாள் கழித்து தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்தார், இடைக்கால நடவடிக்கையாக மட்டுமே இலாகாவை ஏற்றுக்கொண்டதாகவும், நிலைமையை கையாள ஜனாதிபதி விரும்பினால் பொருத்தமான நபரை நியமிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இராஜினாமா கடிதத்தை கையளித்த போதிலும், ஜனாதிபதி இன்றுவரை இராஜினாமாவை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் புதிய அமைச்சரவை பதவியேற்கும் போது சப்ரி தொடர்ந்து நிதியமைச்சராக இருப்பார் என்றும், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட புதிய பொருளாதார ஆலோசனைக் குழுவுடன் ஐஎம்எப்க்கு (IMF ) செல்வார் என்றும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.