அம்பாறை மாவட்டத்தில் டென்னிஸ் விளையாட்டரங்கு திறந்து வைப்பு

அம்பாறை மாவட்டத்தில் பொலிஸ் திணைக்களத்தின் உதவியுடன் டென்னிஸ் சங்கத்தினால் பொது மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்ட டென்னிஸ் விளையாட்டரங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்தார்.

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் தமெந்த விஜயசிறி ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அம்பாறை மாணவர்கள் டென்னிஸ் விளையாட்டில் தமது திறமைகளை வளர்த்துக் கொள்ள இது ஒரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்