வைத்தியசாலை சூழலில் நாய்த்தொல்லை அதிகரிப்பு : அச்சத்தில் நோயாளர்கள்!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – சங்கானை வைத்தியசாலையிலும் அதன் சுற்றாடலிலும், வைத்தியசாலையின் அருகிலுள்ள சங்கானை பிராந்திய வைத்திய அதிகாரி அலுவலகத்தினை அண்மித்த சுற்றாடலிலும் நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது.

இதனால் வைத்தியசாலைக்கு சேவையினை பெறச்செல்லும் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் வளாகம், பிரதான நுழைவாயில், அருகிலுள்ள வீதிகள் மற்றும் சந்திகளில் அதிகளவிலான நாய்கள் உலவித்திரிகின்றன.

இதனால் நோயாளர்கள் மட்டுமின்றி வீதியால் செல்வோரும் விபத்து ஏற்படுமோ அல்லது நாய்கள் கடிக்குமோ என்கின்ற அச்சத்துடன் பயணிக்கின்றனர்.

பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு செல்லும்போது தாம் நாய்க்கடிக்குள்ளாகுவமோ என்கின்ற அச்சம் காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமின்றி வைத்தியசாலைச் சுற்றாடலில் அவை மலம் மற்றும் சிறுநீர் கழிப்பதால் பெரும் சுகாதாரப் பிரச்சினையும் ஏற்படுவதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்