வைத்தியசாலை சிற்றூழியர் தவறான முடிவெடுத்து மரணம்
வவுனியா பொது வைத்தியசாலையில் பணிபுரியும் பெண் சிற்றூழியர் ஒருவர் அவரது வீட்டில் தவறான முடிவெடுத்து நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளதுடன், இந்த பெண் அவரது வீட்டில் அறையொன்றில் தூக்கில்தொங்கிய நிலையில் இருந்ததை உறவினர்கள் கண்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் ஈச்சங்குளம் பொலிஸாருக்கு உறவினர்கள் தெரியப்படுத்தியதையடுத்து பொலிஸார் சடலத்தினை மீட்டுள்ளனர்.
மேலும் இந்த பெண்ணின் கணவர் அவுஸ்திரேலியாவில் வசித்துவரும் நிலையில் ஒருசில நாட்களுக்கு முன்பாகவே நாடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்