வெனிசுலாவின் ஜனாதிபதியை கைது செய்வோருக்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர் வெகுமதி!

வெனிசுலாவின் ஜனாதிபதி மதுரோவைக் கைது செய்வோருக்கு, 25 மில்லியன் அமெரிக்க டொலர் வெகுமதியை அமெரிக்கா அறிவித்துள்ளது.

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்ய அல்லது தண்டனை வழங்க வழிவகுக்கும் தகவல்களை வழங்குவோருக்கு, 25 மில்லியன் அமெரிக்க டொலர் வெகுமதியை, அமெரிக்க வெளியுறவுத்துறை நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

2013 முதல் வெனிசுலாவை வழிநடத்தி வரும் நிக்கோலஸ் மதுரோ, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதங்கள் கடத்தல் தொடர்பான குற்றங்களோடு சம்மந்தப்பட்டுள்ளார், என குற்றத் சாட்டப்பட்டுள்ளது.

உயர் அதிகாரிகளைக் கொண்ட வெனிசுலா போதைப்பொருள் கடத்தல் அமைப்பான, கார்டெல் ஆஃப் தி சன்ஸ் (Cartel of the Suns) அமைப்பில், மதுரோ ஒரு முக்கிய பங்காளியாக இருப்பதாக, அமெரிக்க வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

62 வயதான மதுரோ, போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் பயங்கரவாதத்தில் ஈடுபட்டதாக, 2020 முதல் அமெரிக்கா குற்றம் சாட்டி வருகின்றது.

குற்றப்பத்திரிகையின்படி, ஒழுங்கமைக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பான, கொலம்பியாவின் புரட்சிகர ஆயுதப் படைகளுடன் (FARC), பல டன் போதைப்பொருள் ஏற்றுமதிகளை மதுரோ ஒருங்கிணைத்தார் என சொல்லப்படுகின்றது.

கொலம்பியாவின் புரட்சிகர ஆயுதப் படைக்கு, ஆயுதங்களை வழங்குமாறு, கார்டெல் ஆஃப் தி சன்ஸ் அமைப்பை, மதுரோ வழிநடத்தியதாகவும், அந்தக் கும்பலின் ஆயுதப் பிரிவாகச் செயல்பட்ட ஒரு அங்கீகரிக்கப்படாத போராளிக் குழுவிற்குப், பயிற்சி அளித்ததில் மதுரோவின் பங்கு இருப்பதாகவும், அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்