விமானங்கள் தூவும் இளஞ்சிவப்பு நிறம் என்ன?
தற்போது உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள முக்கிய சம்பவங்களில் ஒன்று அமெரிக்காவின் காட்டுத்தீ. அமெரிக்க வல்லரசுக்கு மிகப்பெரிய இழப்புகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் இந்த தீயை அணைக்க அந்த நாடு போராடி வருகின்றது.
இந்நிலையில் விமானங்கள் மூலம் தீயை அணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதில் விமானங்களில் இருந்து இளஞ்சிவப்பு நிறத்திலான தூள் போன்ற ஒன்றை கீழே தூவுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
பலருக்கு சந்தேகம் இருக்கிறது. இந்த இளஞ்சிவப்பு நிற தூள் என்ன? தீயை அணைக்க நீரை தானே ஊற்ற வேண்டும் இது என்ன தூள் போன்று ஒன்றை தூவி விடுகிறார்கள் என்ற குழப்பம் இருக்கிறது.
ஃபோஸ்-செக்(Phos-Chek) என்று அழைக்கப்படும் தீ தடுப்பு மருந்து மருந்து தான் இது.
சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த மருந்து தீயை அணைக்க பயன்படுத்தப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மருந்து பெரிமீட்டர் சொலூஷன்ஸ் (Perimeter Solutions) என்ற நிறுவனத்தால் உற்பத்தி செய்து விற்கப்படுகிறது.
அமெரிக்காவில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த 1963 ஆம் ஆண்டு முதல் ஃபோஸ்-செக் (Phos-Chek) பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கலிஃபோர்னியா வனவியல் மற்றும் தீ அணைப்பு துறையால் இந்த மருந்து நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு காட்டுத்தீயை அணைக்க பயன்படுத்தப்படும் இந்த இரசாய மருந்து இயற்கைக்கு பாதுகாப்பானதா என்ற ஒரு கேள்வி இங்கு இருக்கிறது.
இந்த தீ அணைப்பு மருந்தை தயாரிக்கும் பெரிமீற்றர் சொலூஷன்ஸ் நிறுவத்திற்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு அமெரிக்காவின் வனவியல் துறை அதிகாரிகளால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த இரசாயன மருந்தை காடுகளில் தூவுவதால் அங்கு உள்ள நீர்நிலைகள் அசுத்தமடையும் என்றும் வன விலங்குகளின் ஆரோக்கியம் பாதிப்படும் என்றும் அந்த அதிகாரிகள் பெரிமீற்றர் சொலூஷன்ஸ் நிறுவனத்துக்கு எதிராக வாதத்தை முன்வைத்தனர்
அத்துடன் இந்த மருந்தை தூவுவதால் நீர்நிலைகளில் இருக்கும் மீன்கள் இறந்து போகக்கூடும் என்றும் பெரிமீற்றர் சொலூஷன்ஸ் நிறுவனம் சட்டவிரோதமாக இந்த மருந்தை தயாரித்துள்ளது என்றும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
2023 ஆம் ஆண்டு அமெரிக்க நீதிமன்றம் பெரிமீற்றர் சொலூஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள மருந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு எதிரானது என்ற வாதத்தை ஏற்றுக்கொண்டது.
எனினும் தொடர்ந்தும் அந்த தீ தடுப்பு மருந்தை பயன்படுத்த வனதிணைக்களத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
அத்துடன் நீர்நிலைகள் மற்றும் அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களின் வாழ்விடங்கள் போன்ற இடங்களில் மருந்தை பயன்படுத்த கடுமையான தடையை வனத்துறை விதித்தது.
ஆயினும் மனித உயிர் அல்லது பொது பாதுகாப்பு ஆபத்தில் இருக்கும் சூழ்நிலைகளில் இந்த தடை தளர்த்தப்படும் என்றும் தெரிவித்தது அமெரிக்க வனதுறை.
தற்போது குறித்த தீயணைப்பு மருந்தில் உள்ள ஆபத்தை விளைவிக்கும் ஃபோஸ்-செக்கில் (Phos-Chek) உள்ள எல்சி95 ( LC95) எனும் ஃபார்முலாவை நிறுத்தி அதற்குப் பதிலாக, இப்போது எம்விபி-எபெஸ்(MVP-Fx) என்ற புதிய ஃபார்முலாவை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இந்த மருந்து வனவிலங்குகளுக்கு குறைவான தீங்கை தான் விளைவிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.