மாவடிப்பள்ளி பிரதேசத்தின் பெயர் பலகை தெளிவின்மை: மக்கள் சிரமம்

அம்பாறை மாவட்டத்தின் மாவடிப்பள்ளி பிரதேசத்தின் பெயர் பலகை தெளிவின்மை காரணமாக வெளியூரிலிருந்து வருபவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் பெயர் பொறிக்கப்பட்ட நவீன பெயர் பலகை அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேச சபைக்கு உட்பட்ட மாவடிப்பள்ளி எல்லைப் பகுதிகளில் நடப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த பிரதேசத்தில் சிறு போக நெல் அறுவடை முடிவடைந்து இருக்கும் காலப்பகுதியில் காட்டு யானைகள் ஊர்களை நோக்கி படையெடுத்து வருகின்றது. இவ்வாறு மாவடிப்பள்ளி பிரதேசத்திற்கு வருகின்ற யானைகளால் குறித்த பெயர்ப்பலகை முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளன.

தற்போது குறித்த பெயர் பலகை தெளிவின்றி காணப்படுவதாகவும் அதனை சீர் செய்து தருமாறும் குறித்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்